மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடப்பாவி... 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... 54 வயது தொழிலாளிக்கு 10 வருட சிறை தண்டனை.!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கட்டிடத் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றம்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள அரியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு என்பவரின் மகன் வேலு. 54 வயதான இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி பெரணமல்லூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மஞ்சள் நீராட்டு விழாவிற்காக சென்றிருக்கிறார்.
அப்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று அந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுது இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போலீசார் வேலுவை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட வேலுவின் மீதான குற்றங்கள் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 வருட சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.