ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
தனியார் பள்ளி மாணவி மாடியில் இருந்து தவறி விழுந்தார்: தற்கொலை முயற்சியா?!,. தொடரும் சோகம்..!
தனியாருக்கு சொந்தமான பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வரும் 12 ஆம் வகுப்பு மாணவி மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. இதன் பின்னர் அந்த பள்ளி சூறையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் திருத்தணியில் உள்ள தனியாருக்கு சொந்தமான அரசு உதவி பெறும் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மாணவி ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி, காமராசர் சாலை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்றுவருகின்றனர்.
இந்த நிலையில், அந்த பள்ளியில் பயிலும் விருதுநகர் மாவட்டம் ராஜாபாளையம் பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி அந்த பள்ளி்யின் விடுதியில் தங்கி படித்துவந்துள்ளார். இந்த நிலையில் விடுதியில் நேற்று அதிகாலை தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தபோது கட்டிடத்தின் மாடியில் இருந்து எதிர்பாராத விதமாக தடுமாறி விழுந்துள்ளார்.
இதன் காரணமாக கீழே விழுந்த மாணவிக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.