மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான் அப்படி என்ன பேசிவிட்டேன்.! மொத்தத்தையும் விளக்கிய ஆ.ராசா.!
தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் அரசியல் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்களை விமர்சிக்கும் போக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் நேற்று முன்தினம் தி.மு.க. வேட்பாளர் சிவசங்கரை ஆதரித்து, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி ஆ.ராசா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தில், முதல்வர் பழனிசாமியை அவதூறாக பேசியதாக வெளியான வீடியோ சர்ச்சைய ஏற்படுத்திய நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோரது அரசியல் வாழ்க்கையை மையப்படுத்தியே குழந்தை உதாரணத்தை தான் பேசியதாக தெரிவித்தார். இவர்களை பற்றி அரசியல் குழந்தைகளாக உருவகப்படுத்தி நான் பேசிய தேர்தல் பரப்புரை பேச்சுகளை தங்களுக்கு ஏற்றாற்போல் விரசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வேண்டும் என்றே சிலர் உலவ விட்டுள்ளனர் என தெரிவித்தார்.
இருவரின் ஆளுமைகளை குழந்தைகளாக உவமைப்படுத்தி பேசினேன். முதலமைச்சரை அவதூறாக பேசியதாக கூறுவது தவறானது. முதலமைச்சர் என்ற முறையில் நான் அவரை மதிக்கிறேன். அவரின் மாண்புக்கு எந்த சிறிய சேதாரம் தர வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பேசவில்லை. அ.தி.மு.க புகார் கொடுத்தால், நான் சட்டப்படி சந்திப்பேன் என தெரிவித்தார்.