மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. தமிழ்நாட்டில் இந்த தேதியில் பால் கிடைக்காதா?..! பால் நிறுத்தும் போராட்டம்..!! எப்போ தெரியுமா?..!!
ஆவின் நிர்வாகம் தனது பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், தற்போது அவர்களின் போராட்டமானது உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
அந்த வகையில் தமிழக பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் வரும் மார்ச் 17-ஆம் தேதி பால் நிறுத்தும் போராட்டம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ஆவின் பால் கொள்முதல் விலையை எங்களுக்கு உயர்த்தி வழங்கிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம்.
இந்த விஷயம் தொடர்பாக ஆவின் நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி எங்களின் போராட்டம் நடைபெறும். கறவை மாடுகளோடு சாலை மறியல் போராட்டத்தையும் நடத்துவோம் என்று தெரிவித்தார்.