மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காலேஜீக்கு கட் அடித்த மாணவர்!.. கண்டித்த தந்தை; மாணவன் செய்த காரியத்தால் பதறிய பெற்றோர்..!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள ஒறையூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் ஆகாஷ் (21). இவர் அங்குசெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான அன்னை தெரசா பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஆகாஷ் சரிவர கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாகவும், நண்பர்களுடன் ஊர் சுற்றியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த அன்பழகன், ஆகாஷை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆகாஷ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீடு திரும்பிய பெற்றோர் ஆகாஷ் தூக்கில் தொங்கியதை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்த தகவலறிந்த புதுப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலை சம்பவம் குறித்து அன்பழகன் புதுப்பேட்டை காவல் நிலையத்தி. புகார் அளித்தார். புகாரின் அடிப்படையி, வழக்குப்பதிவு செய்த காவல்துறயினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒறையூர் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.