திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இளம் பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!.. போலீசார் விசாரணை..!!
ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்தியை காட்டி இளம்பெண்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக இரண்டு பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் தமிழக காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள காவலன் செயலியில், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில், ஸ்ரீபெரும்புதூர் எம்.ஜி.ஆர். நகரில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறேன். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் எனது ஆண் நண்பருடன் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உணவு சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தேன்.
அப்போது பின்தொடர்ந்து வந்த இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி வடமங்கலம் செல்லும் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வமுறை செய்தனர் என்று அந்த புகாரில் கூறியிருந்தார். இதுகுறித்து காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆண் நண்பர் உள்பட இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். புகார் அளித்த பெண்ணுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரிசோதனை சொய்யப்பட்டது. அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ், ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.