மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: ஆவின் நெய், வெண்ணெய் விலை கிடுகிடு உயர்வு; இன்றுமுதல் அமல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தமிழகத்தில் பிரதானமாக விற்பனை செய்யப்படும் ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இது இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை தந்தது.
இந்நிலையில், ஆவின் பால் பொருட்களின் விலையும் தற்போது உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் சார்பில் நெய், வெண்ணெய் உட்பட பல்வேறு பால் சார்ந்த பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன.
அந்த வகையில், ஆவின் நெய் விலை அரை கிலோவுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.365 க்கு விற்பனை செய்யப்படும். கிலோ நெய் ரூ.70 உயர்ந்து ரூ.700 க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அரைகிலோ வெண்ணெய் விலை ரூ.15 உயர்த்தப்பட்டு ரூ.275 க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றமானது இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.