ஆவின் பால் பாக்கெட் விலை உயர்வா? இனி ஆரஞ்சு நிற பாக்கெட் கிடையாதா? முக்கிய தகவலை வெளியிட்ட நிர்வாகம்!!



aavin-officially-explain-about-milk-pocket-price-increa

ஆவின் பாலின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஆவின் பால் இன்று முதல் வயலட் நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் எனவும்  செய்திகள் பரவி வந்தது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ஆவின் பால் விலை உயர்வு என்ற தலைப்பில் தொலைக்காட்சிகளில் 200 மி.லி பாக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் பால் இன்று முதல் violet நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

aavin

இதுகுறித்து தெளிவுரை வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தால் (ஆவின்) தினசரி 41000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 33700 லிட்டர் பால் பாக்கெட்டுகளாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தினமும் நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்கள் விருப்பத்திற்கேற்ப புதிய பால் மற்றும் பால் உபபொருட்கள் அவ்வப்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி ஆவின் மூலம் cow milk பெருமளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வகை cow milk  200 ml Delite என்ற பெயரில் ரூ 10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆவின் டிலைட் 500 மிலி பாக்கெட்டுகள் தொடர்ந்து அதே பழைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் எந்தவித  மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து ஆவின் டிலைட் பால் விற்பனை அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சமன்படுத்திய பால் (T.M.) நிறை கொழுப்பு பால் (FCM) மற்றும் ஆவின் டிலைட் 500 மிலி பாக்கெட்டுகளை அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என அறிவிக்கப்பட்டுள்ளது.