மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மது போதையில் ஏ.சி.யை போட்டுவிட்டு தூங்கிய நபர்.! திடீரென வெடித்த ஏ.சி.! அதிர்ச்சி சம்பவம்.!
தற்போதைய கோடைகாலத்தில் பெரும்பாலான வீடுகளில் ஏ.சி பயன்படுத்துகின்றனர். பல இடங்களில் ஏசி, ப்ரிட்ஜ் ஆகியவை வெடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் கடந்த சில வருடங்களாக நடந்துகொண்டு வருகிறது. குளிர்சாதனப் பொருள்களில் R-600A வாயு பயன்படுத்தப்படுகிறது. இந்த வாயு எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டது. குளிர்சாதனப் பொருள்களில், அனுமதிக்கப்பட்டிருக்கும் அளவையும் தாண்டி வாயுவை அடைப்பதால் விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு வீட்டில் ஏ.சி.யை போட்டுவிட்டு தூங்கியுள்ளார். அப்போது திடீரென ஏ.சி. எந்திரத்தில் கியாஸ் கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியுள்ளது. இதில் அங்கு படுத்து இருந்த மணிகண்டன் உடலில் தீப்பிடித்து கொண்டது.
உடலில் தீப்பிடித்து எரிந்ததால் மணிகண்டன் அலறல் சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். காயமடைந்த மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.