மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெடிகுண்டு வீசி இரட்டை கொலை செய்த வழக்கு.! போலீஸ் மீது தாக்குதல்..! 2 பேர் என்கவுன்ட்டர்.!
செங்கல்பட்டு கே.கே. தெருவை சேர்ந்தவர் கார்த்திக் என்ற அப்பு. 32 வயது நிரம்பிய இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், நேற்று மாலை கார்த்திக், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டீக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் நபர்கள் 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசி கார்த்திக்கை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பினர்.
பின்னர் அதே கும்பல் செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரை வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். அடுத்தடுத்து இரட்டை கொலை சம்பவம் குறித்து தகவ்வளறிந்த போலீசார் அவர்கள் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனையடுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்கள் யார் என்று தேடி வந்தநிலையில், வெடிகுண்டு வீசி இரட்டை கொலை செய்த வழக்கில் இன்று காலை செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அருகே 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களை அழைத்து வந்தபோது தப்ப முயன்ற தினேஷ், மொய்தீன் ஆகியோர் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கியதாகவும், தற்காப்புக்காக காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் தினேஷ், மொய்தீன் ஆகிய 2 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.