"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
நீங்கதான் உண்மையான சிங்கப் பெண்கள்! இணையத்தை கலக்கும் அழகிய புகைப்படம்! குவியும் லைக்ஸ்!
தமிழ் சினிமாவின் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பிகில். இந்த படம் பெண்களை போற்றும் விதமாகவும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் அமைந்தது. மேலும் இதில் வரும் சில வசனங்கள் மற்றும் பெண்களுக்கு ஆதரவான கருத்துக்கள் வாழ்வில் பல இன்னல்களையும், சவால்களையும் சந்தித்த பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் விதமாக அமைந்தது.
மேலும் அதில் முகத்தில் ஆசிட் வீசிய பெண்ணிடம் விஜய் பேசிய அழகு என்பது முகத்தில் இல்லை என்ற வசனங்கள் அவர்களைப்போல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெரும் தைரியத்தை கொடுத்தது.
இந்நிலையில் ஆசிட் வீச்சு போன்ற பல விபத்துக்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றாக இணைந்து தன்னம்பிக்கையோடுஅழகிய புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் நீங்கள்தான் உண்மையான சிங்க பெண்கள் என வாழ்த்துக்களை கூறி லைக்குகளை குவித்து வருகின்றனர்.