மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீர் மூச்சுத்திணறலை அடுத்து பிரபல தமிழ் நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி..
பிரபல நடிகர் கார்த்திக் திடீர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நவரச நாயகன் கார்த்திக். சினிமாவில் ஹீரோவாக நடித்துவந்த இவர், தற்போது படங்களில் குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். மேலும் மனித உரிமைகள் காக்கும் கட்சி என்ற கட்சியையும் தொடங்கி அரசியல் பணியும் செய்துவருகிறார் நடிகர் கார்த்திக்.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தனது ஆதரவை அதிகமுக கட்சிக்கு வழங்குவதாக தெரிவித்திருந்த அவர், நேற்றிரவு அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை சென்னை அடையாறில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வரும் அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.
மேலும், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.