திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அன்புமணி இராமதாஸ் குறித்து தம்பி இராமையா என்ன கூறினார் தெரியுமா? : வைரலாகும் வீடியோ..!
தனியார் தொலைக்காட்சியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் தம்பி ராமையாவிடம் அரசியல் தலைவர்களின் படங்கள் பதிவிடப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் புகைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அப்போது, அன்புமணி இராமதாஸ் குறித்து பேசிய தம்பி ராமையா, "ஒழுக்கம்., Fitness., அரசியல்வாதியும் அழகாக இருக்கலாம். அரசியல்வாதியும் படித்து முடித்து மருத்துவ சேவைக்குதான் செல்ல வேண்டும் என்றும், மருத்துவம் கற்றறிந்தவரும், தகுதிகளை தாறுமாறாக வளர்த்துக்கொண்டு தமிழகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று ஒழுக்க சிந்தனையோடு உலா வரும் அற்புதமான இளம் தலைவர்" என்று கூறினார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லை. ஆனால், வீடியோ அனுமதி இன்றி மறைமுகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது.