குடும்பத்துடன் கொலை செய்திடுவேன் - பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்.. காவல் நிலையத்தில் புகார்.!
அட அட.. தாவணியில் தேவதையாய் மின்னிய தேவயானியா இது?.. முழுசா மாறி மாடர்ன் உடையில் இப்படி கலக்குறாரே..!
தமிழில் 90'sகளின் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை தேவயானி. இவர் 90'sகளில் இருந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர். அதிகமாக பாவாடை தாவணி அல்லது புடவையில் தான் பல படங்களில் நடித்திருப்பார்.
இவர் மாடர்ன் உடை அணிந்திருந்தாலும் பார்ப்பதற்கு எந்த ஒரு முகம் சுழிப்பும் இல்லாதவாறுதான் அணிவார். முன்னணி நடிகர்களான விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் நடித்த தேவயானி ஒரு கட்டத்தில் மார்க்கெட் குறையவே சின்னத்திரை பக்கம் சென்றார்.
சின்னத்திரையில் கோலங்கள் என்ற தொடர் பெரியளவில் அவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது. பின் திருமணம், குழந்தைகள் என பிசியாக இருந்தார். இந்த நிலையில், தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த தொடரில் தேவயானிக்கு இரண்டாவது திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்காக அவர் மாடன் உடையில் அழகாக போட்டோசூட் நடத்தியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அட அட.. தேவயானியா அல்லது தேவதையா என்று ரசித்து வருகின்றனர்.