பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வாவ்..!! இது சூப்பர் மேட்டர் ஆச்சே..! அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா கொடுத்த அசத்தலான தேர்தல் வாக்குறுதி..
தான் வெற்றிபெற்றால் தனது சம்பளம் முழுவதையும் ஏழை குழந்தைகளின் படிப்பு செலவுக்காக செலவழிப்பேன் என கூறி வாக்கு சேகரித்துவருகிறார் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா.
தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கேட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து இடங்களிலும் அனல்பறக்கும் பிரச்சாரம் நடந்துவருகிறது.
ஏற்கனவே திமுக, அதிமுக போன்ற பிரதான காட்சிகள் தொடங்கி கமலின் மக்கள் நீதி மய்யம், அமமுக போன்ற காட்சிகள் உட்பட மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு உறுதிகளுடன் தேர்தலை வாக்குறுதிகளை வெளியிட்டு வாக்கு சேகரித்துவருகின்றனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியில் வேட்பாளர் இசக்கி சுப்பையா அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் மக்கள் தனக்கு வாக்களித்து தன்னை சட்டமன்ற உறுப்பினராக்கினால், 'தனது சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஊதியத்தை ஏழை குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவேன்' என வாக்குறுதி அளித்துள்ளார்.