அதிமுக தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனை! என்ன காரணம்?



ADMK meeting in ADMK office

கடந்த சில நாட்களாக அதிமுக தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இடையே முதல்வர் வேட்பாளர் குறித்த வாக்குவாதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவை இரு தலைவர்கள் வழிநடத்துகிறார்கள். அதிமுக எப்போதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் நடைபெறும். தேர்தலுக்கு பின் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்தார். எடப்பாடியார் தான் என்றும் முதல்வர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து விவாதம் எழுந்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடைபெறுகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள, அமைச்சர் சி.வி. சண்முகம், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்துள்ளனர்.

ADMK office

வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாக  தமிழக பாஜக தலைவர்கள் சிலர் கூறிய கருத்தும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனையின் போது முதல்வர் வேட்பாளர் யார் என விவாதம் நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது