வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
பலரின் கனவை தவிடுபொடியாக்கிய எடப்பாடி பழனிச்சாமி.! தரமான சம்பவம்.!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்தால் அதிமுக என்ற கட்சியே இல்லாத நிலை உருவாகும் என அரசியல் விமர்சகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். அவ்வாறு தோல்வி அடைந்தால் சசிகலா மற்றும் தினகரன் வசம் அ.தி.மு.க.,வை கொண்டு சேர்த்துவிடும் எனவும் கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போதையை தேர்தல் முடிவுகள் இந்த கணிப்பை அப்படியே மாற்றி போட்டது.
ஜெயலலிதா இல்லையென்றாலும் எடப்பாடி பழனிச்சாமி கட்சியையும் ஆட்சியையும் திறப்பட வழிநடத்தியதோடு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்து தேர்தலை சந்தித்தார். இதனால் தற்போது அவருக்கு கிடைத்திருப்பது கவுரவமான தோல்வியாகவே அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கவில்லை என்றாலும், ஆளும் கட்சிக்கு அடுத்த நிலையை எட்டவேண்டும் என்ற கனவுடன் களமிறங்கிய கட்சிகளை, ஓரங்கட்டி 75 தொகுதிகளில் வெற்றிபெற்று பிரதான எதிர்க்கட்சியாக அமரவுள்ளது.