#Breaking: குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம் - வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு.!



agriculture-budget

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், 2023 - 24ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். அவையில் அவர் பேசியவை பின்வருமாறு, 

165 வேளாண் பட்டதாரிகளுக்கு கடந்த நிதியாண்டில் தலா ரூ.1 இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. 119 இலட்சத்து 97 ஆயிரம் டன் உணவுகளை உற்பத்தி செய்து தமிழ்நாடு சாதனை புரிந்துள்ளது. 

ration card

ஆறுகள், கால்வாய்கள், தடுப்பணைகள் தூர்வாரப்பட்டுள்ளதால் விவசாய பணிகள் அதிகரித்துள்ளன. இதனால் தர்மபுரி, நீலகிரி மாவட்ட ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.