மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே... போதையில் பெற்றோர் செய்த செயல்... 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.!
மதுரையில் குடித்து விட்டு வந்த பெற்றோர் சிறுமியை துன்புறுத்திய சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நலப் பாதுகாப்பு குழு நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை மாவட்டம் அவனியாபுரம் பெரியசாமி தெருவை சார்ந்த தம்பதியினருக்கு 9 வயதில் மகள் இருக்கிறார். அங்குள்ள பள்ளியில் அந்த சிறுமி நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் தினம் குடித்துவிட்டு வந்து சிறுமியை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.
இதனால் பெற்றோர்களின் கொடுமை தாங்க முடியாத சிறுமி தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்தார் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு நிர்வாகிகளான சோபனா மற்றும் டயானா ஆகியோர் அந்த குழந்தையிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் காவல் துறை சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை செய்து வருகிறது. பெற்றோர்களே குடித்துவிட்டு வந்து குழந்தையை கொடுமைப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.