மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேங்காய் பறிக்க சென்றபோது விபரீதம்.. கூலித்தொழிலாளி துடிதுடிக்க பரிதாப மரணம்.!
தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க சென்ற தொழிலாளி தவறி விழுந்து பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் பகுதியில் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் பார்த்தசாரதி (வயது 39). தொழிலாளியாக பணிபுரியும் இவர் தனது மனைவியை பிரிந்து வெகுநாட்களாக தனியாகவே வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், பார்த்தசாரதி கள்ளிகுப்பம் பகுதியில் மேற்கு பாலாஜி நகரில் ஒருவரது வீட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். தேங்காய் பறித்துக் கொண்டிருக்கும் போது திடீரென அவரது கால் தவறிய நிலையில், மேலிருந்து பார்த்தசாரதி கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தசாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரணை நடத்தினர். தொழிலாளி தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.