#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒட்டுமொத்த தமிழகமும் அம்மா.. அம்மா.. என கதறிய தினம்!. மறக்கமுடியுமா?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க., மற்றும் அ.ம.மு.க கட்சி சார்பில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு அமைதி ஊர்வலம் செல்லவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தொடர்ந்து 75 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நிலையில், சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார்.
தனி பெண்ணாக, இரும்பு மனுஷியாக இருந்து திறம் செயல்பட்டு வந்த ஜெயலலிதாவின் மரணம் தமிழகத்தையே கண்ணீர் சிந்த வைத்தது.
மேலும் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. கட்சியிலும் பல குழப்பங்கள் உருவானது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வமும் பதவி ஏற்றனர். பின்னர் அதிமுக கட்சி பிளவடைந்து பல புதிய கட்சிகள் உருவாகின.
மேலும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார், சசிகலாவின் சகோதரர் திவாகரன் அண்ணா திராவிட கழகம் எனவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற கட்சியையும், தொடங்கியுள்ளனர். இவை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையிலிருந்து காலை 9.30 மணிக்கு அமைதி ஊர்வலம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊர்வலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துண முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
அதேபோல், டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பிலும் அண்ணா சிலை அருகே இருந்து காலை 10 மணிக்கு அமைதி ஊர்வலம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு கட்சிகளும் வாலாஜா சாலை வழியாக மெரினாவில் உள்ள அம்மாவின் நினைவிடத்திற்கு ஊர்வலமாக செல்ல உள்ளது. இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.