திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதல் விவகாரத்தில் ஐஸ் வியாபாரி வெட்டி கொலை... குற்றவாளிகளை தீவிரமாக தேடி வரும் காவல்துறை.!
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் காதல் விவகாரம் தொடர்பாக முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கரும்புள்ளி பட்டியைச் சேர்ந்தவர் குப்புசாமி(56). அந்தப் பகுதிகளில் ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய தங்கையின் பேத்தியான பூஜா(22) என்பவரை கரூர் அருகே உள்ள தேவர் மலையைச் சார்ந்த ஜீவா என்பவர் காதலித்து வந்தார். ஜீவா கரும்புள்ளி பட்டியில் தனது தாத்தா நாதன் வீட்டில் தங்கி இருக்கிறார். மேலும் ஜீவா மோசமான போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால் குப்புசாமியும் அவரது மகன் மாரிமுத்துவும் ஜீவாவை கண்டித்து இருக்கின்றனர். இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் இரு தரப்பிற்கு இடையே பிரச்சனையாகி இருக்கிறது.
க்ஷஇதனைத் தொடர்ந்து குப்புசாமியும் அவரது மகன் மாரிமுத்துவும் பொத்தமேட்டுப்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். நிலையில் குப்புசாமி அவரது மனைவி மற்றும் மகன் மாரிமுத்து ஆகியோர் கரும்புலி பட்டியில் உள்ள தங்களது தோட்டத்திற்கு திரும்பும் வழியில் கலிங்கப்பட்டி சாலை பிரிவு அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பல் குப்புசாமி மற்றும் அவரது மகன் மாரிமுத்துவை சராமாறியாக வெட்டி இருக்கிறார்கள். இந்த தாக்குதலில் குப்புசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் முத்துவிற்கு மணப்பாறை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தடயங்களை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த கொலை ஜீவா அவரது அண்ணன் பிரவீன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பு தெரிவித்து இருக்கிறது.