தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
வேற லெவல்! அன்னையர் தினத்தில் ஆனந்த் மஹிந்திரா செய்த நெகிழ்ச்சி காரியம்.! செம சந்தோஷத்தில் இட்லி பாட்டி.!
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே ஆலாந்துறை வடிவேலாம்பாளையம் என்ற பகுதியில் வசித்து வருபவர் கமலாத்தாள் பாட்டி. 85 நிறைந்த அவர் கடந்த பல ஆண்டுகளாகவே தனி ஆளாக இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார். யாருடைய உதவியும் இல்லாமல் அவரே இட்லி, சட்னி, சாம்பார் தயாரித்து விற்பனை செய்து வருகின்றார்.
மேலும் அவர் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என விற்பனை செய்து வருகிறார். இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள ஏழை எளிய மக்கள் பெரும்பலன் அடைந்துள்ளனர். கமலாத்தாள் பாட்டியின் சேவையை அறிந்த மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்சி, ஆகியவற்றை வழங்கினார். மேலும் இதனைத் தொடர்ந்து பாரத் கேஸ் மாதந்தோறும் இரு சிலிண்டர்களையும், ஹெச்பி கேஸ் ஒரு சிலிண்டரையும் பாட்டிக்கு வழங்கி வருகின்றனர்.
எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்க தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவர்க்கு, சிறிது சந்தோஷம் கொடுக்கும் முயற்சியை விட வேறு ஒரு பெரிய சந்தோஷம் இல்லை. pic.twitter.com/KCN7urkSTG
— anand mahindra (@anandmahindra) May 8, 2022
இந்த நிலையில் பாட்டிக்கு தற்போது 7 லட்சம் செலவில் அழகிய வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவதுகடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி வீட்டிற்காக பூமி பூஜை போடப்பட்டு, கடந்த 5ம் தேதி கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து மஹிந்திரா குழுமத்தின் திருப்பூர் முதன்மை செயல் அதிகாரி புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கான சாவியை கமலாத்தாம்மாள் பாட்டியிடம் அன்னையர் தினத்தை முன்னிட்டு வழங்கியுள்ளார். இதனை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.