தமிழக அரசின் இ பாஸ் செல்லாது! ஆந்திர எல்லையில் நிற்கும் தமிழக வாகனங்கள்!



andra govt not allowed e pass

 நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஊரடங்கு உத்தரவு பல கட்டங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில் தான் ஆரம்பத்திலிருந்தே கொரோனா அதிகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் வெளியே செல்லாமல் இருப்பதை தவிர்க்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இ-பாஸ் உள்ளதா, இ-பாஸ் உண்மையானதா என தீவிரமாக ஆராய்ந்த பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டம் செல்லவோ அல்லது மாநிலங்கள் இடையிலான போக்குவரத்திற்கோ இ பாஸ் பெற்று செல்லலாம் என அரசு அறிவித்துள்ளது. 

144

அதன்படி இணையதளம் மூலம் இ பாஸ் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு வழங்கிய இ பாஸை ஏற்க ஆந்திரா போலீசார் மறுப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆந்திராவில் உள்ள திருப்பதி கோயிலுக்கும், மருத்துவமனை போன்ற தேவைகளுக்கும் தமிழகத்தில் இருந்து பலர் ஆந்திரா செல்கின்றனர். 

அவர்கள் தமிழக அரசிடம் உரிய அனுமதி பெற்ற இபாஸ் மூலம் சென்றாலும், திருத்தணி அருகே அவர்கள் தடுத்து நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஆந்திர எல்லைக்குள் செல்ல தமிழக அரசின் இ பாஸ் செல்லாது என்றும், ஆந்திர அரசின் இபாஸ் வேண்டுமென்றும் போலீசார் தெரிவிப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.