திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இருசக்கர வாகன ஓட்டியின் அதிவேக பயணத்தால் நடந்த சோகம்; இளைஞர், முதியவர் பரிதாப பலி.!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் வீரப்பெருமாள் (வயது 75). இவர் இன்று தனது மிதிவண்டியில் பயணித்துக்கொண்டு இருந்தார்.
அப்போது, எதிர்திசையில் இருசக்கர வாகனத்தில் வருகைதந்த வசந்த் (வயது 35) என்பவரின் வாகனம் மோதி, வீரப்பெருமாள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
விபத்தை ஏற்படுத்தியதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வசந்தின் இருசக்கர வாகனம், அவ்வழியே வந்த காரின் மீது மோதி விபத்தில் சிக்கியது.
இந்த சம்பவத்தில் நடுரோட்டில் உயிருக்கு போராடிய வசந்த், பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தவிகள் அறிந்த ஜெயங்கொண்டம் காவல் துறையினர், இருவரின் உலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்குபதிந்துள்ள காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். அதிவேகத்தில் இருசக்கர வாகன ஓட்டி பயணித்ததே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.