காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
டிராக்டர் விபத்தில் 3 பேர் படுகாயம்.. விசாரணைக்கு பயந்து ஓட்டுநர் தற்கொலை.. அரியலூரில் சோகம்.!
இளைஞர் இயக்கி சென்ற டிராக்டர் ஏற்படுத்திய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில், விசாரணைக்காக ஓட்டுனரை காவல் துறையினர் அழைத்தபோது, கைதுக்கு பயந்த வாலிபர் தற்கொலை செய்து உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம், கோவில் வாழ்க்கை கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். இவரின் மகன் புவியரசு (வயது 19). புவியரசு ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரின் நண்பர் அருள்.
பொங்கல் பண்டிகையையொட்டி அருளின் வீட்டில் இருந்த டிராக்டருக்கு பூஜை போடப்பட்ட நிலையில், டிராக்டரை புவியரசு ஒட்டி சென்றுள்ளார். அருள் அருகில் அமர்ந்திருக்கவே, சிறிது தூரம் சென்ற டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து கூட்டுறவு பால் சொஸைட்டிக்குள் புகுந்துள்ளது.
பால் சொஸைட்டிக்குள், பால் வாங்குவதற்காக வந்திருந்த 2 பெண்களின் மீது டிராக்டர் மோதிய நிலையில், அருளும் கீழே விழுந்து காயமடைந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், படுகாயமடைந்து துடித்த 3 பேரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
2 பெண்கள் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், விபத்தை ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து, புவியரசை விசாரணைக்கு அழைத்துள்ளனர். காவல் துறையினரின் விசாரணைக்கு பயந்துபோன புவியரசு, கைது அச்சத்தில் வீட்டில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஆண்டிமடம் காவல் துறையினர், புவியரசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.