திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குடியால் முடிந்த கதை... கேட்பாரற்று ஊதாரியாக சுற்றி அனாதை பிணமாக இளைஞர்.. அரங்கேறிய கொலை..!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் கல்லாத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் சுதாகர் (வயது 37). இவருக்கு பெற்றோர் இல்லை. இதனால் கூலித் தொழிலாளியாக பணியாற்றி கிடைக்கும் வருமானத்தில், நண்பர்களுடன் சேர்ந்து மது பானம் அருந்திக்கொண்டு இருப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
திருமணம் கைகூட வில்லை என்பதால் அவரை கேட்க ஆள் இல்லாமல் சுற்றித் திரிந்து வந்துள்ளார். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும், சுதாகருக்கும் இடையே இடையே முன்விரோதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவ்வப்போது இளைஞர்கள் சுதாகரை மதுக்கடையில் வைத்து தாக்கி இருக்கின்றனர்.
சம்பவத்தன்று காலையில் மதுபான கடை அருகே இருக்கும் பொது கழிப்பிட வாயிலில் சுதாகர் இரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்துள்ளார். இதனை கவனித்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், ஜெயங்கொண்டம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் அதிகாரிகள், சுதாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.