திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
2 சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து... 2 பேர் பலி., 2 பேர் படுகாயம்.!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கடாரம்கொண்டான் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவரின் தங்கை சஞ்சிதா. இவர்கள் இருவரும் நேற்று இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டம் நோக்கி பயணம் செய்துள்ளனர்.
அப்போது, எதிர்திசையில் இருசக்கர வாகனத்தில் ரஞ்சித் குமார், கவுதம் ஆகிய 2 இளைஞர்கள் வந்துள்ளனர். இவர்களின் இருசக்கர வாகனம் புதுச்சாவடி அருகே வந்தபோது, இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரஞ்சித் குமார் மற்றும் கவுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அண்ணன் - தங்கை இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தற்போது ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.