மூளைச்சாவு அடைந்த அரியலூர் இளைஞரின் 9 உடல் உறுப்புக்கள் தானம்.. பெற்றோர்கள் கண்ணீருடன் நெகிழ்ச்சி செயல்.!



ariyalur-youngster-organ-donated-by-his-parents-he-died

சாலைவிபத்தில் மூளைச்சாவு அடைந்த அரியலூர் இளைஞரின் உடலானது பெற்றோரின் சம்மதத்தால் தானம் செய்யப்பட்டது. 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா. பழூர் சோழமாதேவி கிராமத்தில் வசித்து வருபவர் இராஜேந்திரன். இவர் விவசாய கூலித்தொழிலாளி ஆவார். இராஜேந்திரனின் மனைவி இராசமணி. தம்பதிக்கு 24 வயதுடைய கார்த்திக் என்ற மகன் இருக்கிறார். இவர் திருவள்ளூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். 

இந்நிலையில், கடந்த 20 ம் தேதி இரவில் திருநல்லூரில் இருந்து வந்தவாசிக்கு நண்பர் செந்திலுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார். அப்போது, சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில், கார்த்திக் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். 

Ariyalur

இதனால் மகனின் உடல் உறுப்புகளை பெற்றோர்கள் தானம் செய்ய முன்வரவே, கார்த்திக்கின் கண்கள், இதயம், நுரையீரல் உட்பட 9 உறுப்புகளை மியாட் மருத்துவமனை மூலமாக தானமாக வழங்கியுள்ளனர். மேலும், மகன் விபத்தில் உயிரிழந்து இருந்தாலும், அவன் 9 பேரின் உடலில் இருப்பதாக நினைத்துக்கொள்வதாக பெற்றோர்கள் கண்ணீருடன் நின்றது காண்போரின் நெஞ்சை கலங்க வைத்தது.