#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விபத்தில் சிக்கிய நடிகர் அருண் விஜய் தற்போது எப்படியுள்ளார் பார்த்தீங்களா! புகைப்படத்தைக் கண்டு பதறிப் போன ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு தல அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து பெருமளவில் பிரபலமாகி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியவர் நடிகர் அருண் விஜய். அதனை தொடர்ந்து அவர் தடம், குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், மாஃபியா போன்ற பல மாஸ் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார்.
அதனைத் தொடர்ந்து பல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அருண் விஜய் பார்டர், சினம், அக்னி சிறகுகள், பாக்ஸர், இயக்குநர் ஹரி இயக்கத்தில் ஏவி33 என பல படங்களை தன் கைவசம் கொண்டுள்ளார். இந்த நிலையில் ஹரி இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது அருண் விஜய்க்கு சிறு விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் அருண்விஜயின் வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக அவர் சிகிச்சை எடுத்து வருகிறார். இந்தநிலையில் படுக்கையில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் அருண்விஜய், 'சீக்கிரமே இந்த காயம் குணமாகிவிடும் என எதிர்பார்க்கிறேன். நாளை மறுநாள் ஏவி 33 படத்திற்காக பெரிய ஸ்டன்ட் சீன் எடுக்க பிளான் பண்ணியுள்ளோம் என பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் அவர் விரைவில் குணமடைய பலரும் வாழ்த்தி வருகின்றனர்.