மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. இளைஞர்களின் பற்களை கட்டிங் பிளேடு வைத்து பிடுங்கும் ஏ.எஸ்.பி..! உஷாராதான் இருக்கணும் போல..!!
குற்றப்பின்னணியில் சிக்கி காவல் நிலையத்திற்கு வந்தால் ஐ.பி.எஸ் அதிகாரி அளித்த பகீர் தண்டனை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
காவல் நிலையத்திற்கும் வரும் புகார்கள் குறித்த விஷயத்தில், விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் இளைஞர்களின் பற்கள் பிடுங்கப்படுகின்றன. அதேபோல, சில இளைஞர்களின் விதைப்பை நசுக்கப்பட்டதாகவும் பகீர் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் வசித்து வரும் இளைஞர், காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
அவரது மனைவி கணவன்-மனைவி பிரச்சினை தொடர்பாக அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், ஏ.எஸ்.பி பல்வேந்தர் சிங் கட்டிங் பிளேடை வைத்து சம்பந்தப்பட்ட இளைஞரின் பற்களை பிடிங்கியதாக பாதிக்கப்பட்டவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
அதேபோல, அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு என அழைத்து செல்லப்பட்ட 10 இளைஞர்களின் பற்களை ஏ.எஸ்.பி பிடிங்கியதாகவும் புகார் எழுந்துள்ள நிலையில், அந்த சம்பவம் குறித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.