மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி தலைமையாசிரியர் மீது தாக்குதல்: தி.மு.க கவுன்சிலரின் கணவர் அட்டூழியம்..!
அவிநாசி பகுதியில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்கள் முன்பு பள்ளி தலைமையாசிரியருக்கும், ஆளுங்கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலரின் கணவருக்கும் இடையே ரகளை ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட்சி, 17வது வார்டுக்குட்பட்ட கைகாட்டிபுதுார் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 59 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள், பள்ளி வளாகத்துக்குள் தங்கள் வீட்டு குப்பையை கொட்டி விடுகின்றனர் என்ற புகார் நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது.
இதுதொடர்பாக, அப்பகுதி ஆளுங்கட்சி கவுன்சிலர் ரமணி என்பவரது கணவர் துரைசாமிக்கும், பெற்றோருக்கும் இடையே, காரசார விவாதம் நடந்தது. இடையில் பள்ளி தலைமையாசிரியர் செந்தாமரைக்கண்ணன் குறுக்கிட்டு பேச, இருவரும் குரலை உயர்த்தி ஒருமையில் பேசியுள்ளனர். ஒரு கட்டத்தில், செந்தாமரைக்கண்ணணின் கழுத்தை பிடித்து , துரைசாமி தள்ளியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.