பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
துர்கா பூஜை கொண்டாட்டத்தித்தின்போது சோகம்; கூட்டநெரிசலில் சிக்கி 3 பேர் பரிதாப பலி.!
பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டம், சுகர் மில் சாலை பகுதியில் துர்க்கா பூஜை கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கின்றன.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 5 வயது சிறுவன், இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் மூவரும் உயிருக்கு போராடும் நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
எதிர்பார்த்ததை விட அளவுக்கு அதிகமான மக்கள் கூடியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூவரும் உயிரிழந்துள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.