பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய் என்னாச்சு? - அண்ணாமலை கேள்வி.!

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை விவகாரத்தில், மாநிலத்தில் ஆளும் திமுக - மத்தியில் ஆளும் பாஜக அரசுகள் இடையே கருத்து முரண் நிலவி வருகிறது. கொள்கை ரீதியான கருத்து மோதல் திமுக - பாஜக இடையேயான கருத்து மோதலை அதிகப்படுத்தி இருக்கிறது.
இதனிடையே, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று அண்ணாமலைக்கு எதிராக பேசியதாக தகவல் வெளியானது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, கண்டனமும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "தீயசக்தி திமுகவை வேரறுத்து ஏறிய வேண்டும்" - அண்ணாமலை பேச்சு.!
அண்ணாமலை கண்டனம்
இதுகுறித்த அண்ணாமலையின் எக்ஸ் பதிவில், "பகுதிநேர பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒரு தனியார் விழா மேடையில் என்னை வசை பாடியதாக அறிந்தேன்.
உங்க வீட்டு பிள்ளைகள் மும்மொழி கற்கலாம், அரசுப் பள்ளியில் படிக்கும் எங்கள் பிள்ளைகள் மும்மொழி கற்பதற்கு உங்கள் அரசியல் தடையாக இருந்தால் அதற்கு எதிராக நாங்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்புவோம்.
அதற்காக நீங்கள் என்னை வசை பாடினால், அதன் அர்த்தம், நான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்பதுதான்.
சொந்த மாவட்டத்தில், மரத்தின் நிழலில் மாணவர்கள் கற்கும் அவலத்தை கண்டும், காணாமல் இருக்க, ஒரு கல் நெஞ்சம் வேண்டும். எங்கே தான் சென்றதோ கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய்.
நீங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் செழிக்க, அரசு பள்ளிகளில் பயிலும் எங்கள் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்காதீர்!" என தெரிவித்துள்ளார்.
பகுதிநேர பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒரு தனியார் விழா மேடையில் என்னை வசை பாடியதாக அறிந்தேன்.
— K.Annamalai (@annamalai_k) February 20, 2025
உங்க வீட்டு பிள்ளைகள் மும்மொழி கற்கலாம், அரசுப் பள்ளியில் படிக்கும் எங்கள் பிள்ளைகள் மும்மொழி கற்பதற்கு உங்கள் அரசியல் தடையாக இருந்தால் அதற்கு எதிராக…
இதையும் படிங்க: #Breaking: பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா? பயமே இல்லை - அண்ணாமலை கடும் கண்டனம்.!