"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
பெண் சக்தி..!! 1 லட்சம் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்து அனுப்பிய பாஜக வினோஜ் பி செல்வம்..
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் அவர்கள் சார்பாக சுமார் 1 லட்சம் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்து அட்டை வழங்கப்பட்டுள்ள தகவல் பாராட்டை பெற்றுவருகிறது.
பிரபல தொழிலதிபரும், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவராக பணியாற்றி வருபவர் வினோஜ் பி செல்வம் (Vinoj P Selvam). தனது 21 வயதில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்ற தொடங்கிய இவர், தென் சென்னை மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர், இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர், இளைஞர் அணி மாநில செயலாளர் என பல பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியதை தொடர்ந்து தற்போது மாநில இளைஞரணி தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த பாஜக தேர்தல் பிரச்சார கூட்ட ஏற்பாடுகளை முன்னின்று திறம்பட நடத்தி முடித்தார் வினோஜ் பி செல்வம். இந்நிலையில், நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டப்பட்ட உள்ள நிலையில், சுமார் 1 லட்சம் பெண்களுக்கு "மகளிர் தின வாழ்த்து" மடல்களை வழங்கி பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் வினோஜ்.
இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "எங்கள் மத்திய சென்னை தொகுதியின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் அனைவரின் கரங்களுக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள் சென்று சேர வேண்டுமென விரும்பினேன். அதன் வெளிப்பாடாக இன்று முதலே அனைவரின் கரங்களிலும் எனது வாழ்த்துச் செய்தி சென்றுகொண்டு இருக்கிறது.
"எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை" என்ற மகாகவி கண்ட புரட்சி பெண்களே… இன்று மட்டுமல்ல; என்றுமே என் வாழ்த்து உங்களுடன் இருக்கும்..! " என தெரிவித்துள்ளார். வினோஜ் அவர்களின் இந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுவருகிறது.
எங்கள் மத்திய சென்னை தொகுதியின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் அனைவரின் கரங்களுக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள் சென்று சேர வேண்டுமென விரும்பினேன். அதன் வெளிப்பாடாக இன்று முதலே அனைவரின் கரங்களிலும் எனது வாழ்த்துச் செய்தி சென்றுகொண்டு இருக்கிறது.
— Vinoj P Selvam (@VinojBJP) March 6, 2024
"எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்… pic.twitter.com/xMeN6aj8GS