மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹெலிகாப்டர் விபத்து நடந்ததற்கான காரணம் என்ன.? கருப்புப்பெட்டி கண்டெடுப்பு.!!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பலியானார். இந்த விபத்தில் ராவத்தின் மனைவி உள்பட 13 பேர் பலியானார்கள். விபத்துக்குள்ளான விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியில் விபத்துக்கு முன் கடைசி நிமிடத்தில் பைலட் பேசியது பதிவாகி இருக்கும். மேலும் எவ்வளவு அடி உயரத்தில் பறந்தது என்பன உள்ளிட்ட விவரங்களும் பதிவாகி இருக்கும். இதனால் விபத்துக்கான காரணத்தை கண்டறிய கருப்பு பெட்டி முக்கியமானது என்பதால், கருப்பு பெட்டியை தேடும் பணி நடைபெற்று வந்தது.
இந்தநிலையில், நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த காட்டேரி பகுதியில் இருந்து கருப்புப்பெட்டி உள்ளிட்ட 3 பொருட்களை ராணுவ அதிகாரிகள் மீட்டுள்ளனர். கண்டெடுக்கப்பட்ட கருப்புப்பெட்டியை டெல்லி அல்லது பெங்களூருக்கு கொண்டு சென்று ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.
விமான கட்டுப்பாட்டு அறையுடன் விமானியின் பேச்சு பதிவு அடங்கிய கருப்பு பெட்டியை ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். டெல்லியில் இருந்து வந்த தொழில் நுட்பகுழு, வெலிங்டன் ராணுவ மைய குழுவினர் கருப்புப்பெட்டியை கண்டெடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.