மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: சென்னையில் திடீர் குண்டு வெடிப்பு..! வெடித்து சிதறிய கண்ணாடிகள்..! அதிர்ச்சியில் பொதுமக்கள்.!
சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகே குண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தேனாம்பேட்டை அருகே உள்ள அண்ணா மேம்பாலம் உள்ளது. பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் முக்கிமான சாலையில் திடீரென குண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சாலை அருகே கண்ணாடிகள் பொருத்தப்பட்ட கட்டிடங்கள் உள்ளதால் பெரும் அதிர்வு ஏற்பட்டு சில கண்ணாடிகள் உடைந்தன.
அங்கு நடந்த குண்டுவெடிப்பில், சாலையின் ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளும் உடைந்தது. அங்கு நடந்த குண்டுவெடிப்பால் அருகில்இருந்த அலுவலகங்களில் அதிர்வு சத்தம் கேட்டு பதட்டத்துடன் வெளியே வந்தனர். சாலையின் ஒருபுறம் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் மறுபுறம் சாலையில் சென்ற வாகனஓட்டிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே காவல்நிலையம் உள்ளது என்பதும் அமெரிக்க தூதரகம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Two unidentified bike-borne men hurled a country made bomb in Teynampet area of Chennai. Glass panel of a nearby shop and a car has suffered damages. Police investigation on. #Chennai #CountryBomb pic.twitter.com/aKIgs4fh3Y
— Shilpa Nair (@NairShilpa1308) March 3, 2020