திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தவறான சிகிச்சையால் பறிபோன இளைஞரின் உயிர்.. நெஞ்சுவலியால் உயிரிழந்ததாக தகவல்..!! உண்மைதான் என்ன?..!!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வண்டலூர், ரத்தினமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பரத். இவர் குடல்வால் சிகிச்சைக்காக அங்குள்ள தாகூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
இந்த நிலையில், காலைநேரத்தில் அவருக்கு அறுவைசிகிச்சை செய்யவேண்டுமென மயக்க மருந்து செலுத்திய சமயத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
இந்த தகவலறிந்த உறவினர்கள் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக கூறி வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே, சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை நடத்துவதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில் தைராய்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த இளைஞர் மயக்கஊசி செலுத்துவதற்கு முன்பே நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அதற்காக சிகிச்சையளித்தும் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.