#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாகன சோதனையில் இருந்த பறக்கும் படை காவலர்கள்.! தாறுமாறாக வந்து மோதிய பேருந்து.! சோக சம்பவம்.!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பறக்கும் படை காவலர்கள் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், சிவகங்கை மாவட்டத்தில் இன்று காலை பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிவகங்கையில் இருந்து தாயமங்கலம் சென்ற அரசு பேருந்து ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்த போலீசார் மீது மோதியது. இதில் 3 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து உடனடியாக அம்புலன்ஸ் வரவழைத்து காயமடைந்த காவலர்களை சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே உதவி சிறப்பு ஆய்வாளர் கர்ணன் என்பவர் உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த இரண்டு காவலர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
இரண்டு காவலர்களின் உடல்நிலை மோசமானதால், அவர்களை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் தலைமறைவான நிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார் ஓட்டுனரை தேடிவருகின்றனர்.