தனியாக நின்ற பள்ளி மாணவியிடம் அத்துமீறிய பேருந்து ஓட்டுனர் கைது!



Bus driver harrasment to school girl in Trichy

திருச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தனியார் பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ரயில் நிலையம் அருகே 17 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 24 வயது இளைஞரை கைது செய்தனர்.

harassment

கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் பெயர் ஷேக் மொய்தீன் என்பதும் தனியார் பேருந்தில் ஓட்டுனராக வேலை செய்வது தெரியவந்துள்ளது. அவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை வலு கட்டாயமாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

harassment

இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது, மாணவிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.