#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வெள்ளத்தில் சிக்கி போலீஸ் ஏட்டு பலி.. கதறும் உறவினர்கள்.!
பண்ருட்டி அடுத்த கரும்பூரை சேர்ந்தவர் ருக்குமாங்கரன். இவர் சென்னை ஐ.சி.எப். பகுதி காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் தற்போது ஏற்பட்ட வெள்ளம் மற்றும் புயல் மீட்பு பணியில் ருக்குமாங்கரன் பணி செய்து வந்துள்ளார். அப்போது மீட்பு பணி செய்ய தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ருக்குமாங்கரன் எதிர்பாராமல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதனை தொடர்ந்து அவரது உடல் தலைமை செயலக குடியிருப்பு வளாகம் அருகே கரை ஒதுங்கி உள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் ருக்குமாங்கரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ருக்குமாங்கரன் உடல் அவரது சொந்த ஊரான பண்ருட்டி, கரும்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அங்கு பெற்றோர் மற்றும் உறவினர்களின் இறுதி சடங்கிற்கு பின் போலீஸ் மரியாதையுடன் ருக்குமாங்கரன் உடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து சென்னை தலைமை செயலக குடியிருப்பு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட காவலர் வெள்ளத்தில் அடித்துச் சென்று உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.