மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
'நீயும் சென்றுவிட்டாயா?' 2வது மனைவியும் பிரிந்ததால் ஆத்திரமடைந்த கணவன் விபரீத முடிவு.!
முதல் மனைவி பிரிந்த நிலையில், இரண்டாவது மனைவியும் விட்டு சென்றதால், கோபத்தில் கணவர் மனைவி வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னையில் உள்ள ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வருபவர் விஷ்ணு (வயது 30). இவர் வீடு வீடாக சென்று பால்பாக்கெட் போடும் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு முன்பே திருமணமான நிலையில், முதல் மனைவியை பிரிந்த விஷ்ணு இரண்டாவதாக மற்றொரு இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
அவர் வடபழனியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதை தொடர்ந்து, 2வது மனைவியின் நடத்தையில் விஷ்ணு சந்தேகப்பட்டுள்ளார். இதன் காரணமாக இவர்கள் இருவருக்குமிடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.
மேலும், விஷ்ணு அவரது மனைவி வேலை செய்யும் கம்பெனிக்கு சென்று தகராறு செய்ததால், கோபமுற்ற அவர் கணவரை பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து இரண்டாவது மனைவியும் தன்னை விட்டு பிரிந்ததால் ஆவேசமடைந்த விஷ்ணு, மனைவி வேலை செய்யும் வடபழனியில் உள்ள நிறுவனத்திற்கு சென்று பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
அதோடு நிறுத்திக்கொள்ளாமல் பெட்ரோல் குண்டு வீசியதை வீடியோவாக எடுத்து மனைவிக்கு அனுப்பி மிரட்டல் விடுத்திருக்கிறார். நல்ல வேளையாக பெட்ரோல் குண்டு வீசிய இடத்தில் யாருமில்லாததால், அதிஸ்டவசமாக எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை.
அத்துடன் மனைவிக்கு அவர் அனுப்பிய வீடியோவை ஆதாரமாக தந்து பெண் வடபழனி காவல்துறையில் புகார் கொடுத்ததால், விஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.