மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: சென்னையில் கோல்டு லோன் நிறுவனத்தில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை - வங்கி ஊழியர் உட்பட 3 பேர் கும்பல் அட்டகாசம்.!
அரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பெட் பேங்க் தங்கநகைக்கடன் நிறுவனத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள அரும்பாக்கம் 100 அடி சாலையில் பெடரல் வங்கியின் பெட் பேங்க் வங்கிக்கிளை செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் இன்று பிற்பகலில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
அரும்பாக்கம் பெட் பேங்க் கோல்டு லோன் வங்கியில், வங்கியின் காவலாளி மற்றும் ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.20 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
3 பேர் கொண்ட கொள்ளை கும்பல், பெண் உட்பட 3 பேர் கொண்ட அலுவலக அதிகாரிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி மயக்க மருந்து தெளித்து கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.
மயக்கம் தெளிந்த பின்னர் ஊழியர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், வங்கியில் பணியாற்றி வரும் ஊழியரின் உதவியோடு கொள்ளை நடந்தது அம்பலமாகவே, தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது. கொள்ளையர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.