#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் அதிர்ச்சி கடிதம்; வாழக்கை வெறுத்தால் இறுதி முடிவு என பகீர் தகவல்.!
தனக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டது என்பதால் தற்கொலை செய்துகொள்கிறேன் என மாணவி கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னையில் உள்ள அயனாவரம், செட்டித்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் செல்வி (வயது 19). இவர் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். செல்வியின் தாய் ஜானகி. தச்சு வேலை செய்து வருகிறார். தம்பி பாபு, அம்பத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர்களின் வீட்டில் கற்பகம் சென்ற பெண்மணி பணிப்பெண்ணாக இருக்கிறார். இந்நிலையில், நேற்று தாய், தம்பி வேலைக்கு சென்றுவிட, கற்பகம் மதியம் 1 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது, செல்வி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி காவல் துறையினருக்கும், ஜானகி மற்றும் பாபுவிற்கும் தகவல் தெரிவித்துள்ளார். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகையில், அவர் எழுதிவைத்த கடிதம் கைப்பற்றப்பட்டது. அக்கடிதத்தில், 'எனக்கு வாழ்க்கை வெறுத்தத்துவிட்டது, இதனால் வாழ பிடிக்கவில்லை. எனவே தற்கொலை செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.