#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#BigBreaking: மீண்டும் சோகம்.. வேலைக்கு புறப்பட்ட காவலர் தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் அதிர்ச்சி.!
சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில் தங்கி இருந்து காவலராக வேலை பார்த்து வருபவர் அருண்குமார். இவரது மனைவியும் காவல்துறையிலேயே பணியாற்றி வருகிறார்.
அருண்குமாருக்கு சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம். அவர் தற்போது அயனாவரம் பகுதியில் விடுதியில் தனது நண்பர்களுடன் தங்கி இருந்து வேலைக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை அவரின் நண்பர்கள் அனைவரும் தங்களின் வேலைக்கு சென்று விட்டனர். தனது நேர பணிக்காக அருண்குமார் காத்திருந்த நிலையில், வேலைக்கு கிளம்பியவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது.
மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட வந்த அவரின் நண்பர், அருண்குமார் சடலமாக தூங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின் தலைமைச் செயலக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.