சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
#BigNews: பறிமுதல் கஞ்சா விற்பனை முயற்சி.. 2 காவலர்கள் அதிரடி கைது.. சென்னை காவல் துறை நடவடிக்கை., பரபரப்பு தகவல்.!

கடத்தல் கும்பலிடம் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்ய முயற்சித்த 2 காவலர்கள் மற்றும் தொழிலதிபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். காவலரே காவலர்களால் கஞ்சா கேசில் கைதான பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
கடந்த 2 வாரங்களாகவே தமிழகத்தில் கஞ்சா விற்பனையை ஒடுக்கும் பொருட்டு 'ஆபரேஷன் கஞ்சா' திட்டத்தின் கீழ் காவல் துறையினர் கஞ்சா கும்பலை கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், குற்ற வழக்கில் தொடர்புடையோர் கண்காணிக்கப்பட்டு கஞ்சா உட்பட போதைப்பொருட்களும் பறிமுதல் செயப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அயனாவரம் சரக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தொழிலதிபர் திலீப் குமார் என்பவரின் வீட்டில் நடந்த சோதனையில் 1 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. அவரிடம் நடந்த விசாரணையில் பல பரபரப்பு தகவல் வெளியாகின.
அதாவது, இரயில்வே காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வரும் சக்திவேல் என்பவரும், தொழிலதிபரும் நெருங்கிய நண்பர்கள். சக்திவேல் கடந்த வாரத்தில் நடந்த கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு இருந்தபோது, 18 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதில், 1 கிலோ கஞ்சாவை எடுத்து அதிகாரிகள் கண்ணில் மண்ணைத்தூவி மறைத்துவிட்டு 17 கிலோ என கணக்கு காண்பித்துள்ளார்.
பின்னர், பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கஞ்சாவை, ஏ.டி.ஜி.பி அலுவலகத்தில் பணியாற்றி வரும் காவலர் செல்வகுமார் என்பவரின் உதவியுடன் எடுத்து வந்து, நண்பரான தொழிலதிபரிடம் கொடுத்து ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனை செய்யும் முயற்சியில் அனைவரும் கூண்டோடு சிக்கிக்கொண்டது தெரியவந்தது. இவர்கள் மூவரையும் கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடித்தனர்.