96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
#Breaking: தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட சென்னை உயர்நீதிமன்றம்...!
2011 ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தனியார் பள்ளிகள் 2022 - 2023 ஆண்டுக்கான கட்டிட திட்ட அனுமதி அங்கீகாரம் புதுப்பிக்க கோரி தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட நிலையில், தனியார் பள்ளிகள் நிர்வாகம் முன்னதாக திட்ட அனுமதி தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது.
இம்மனுவை விசாரணை செய்த நீதிபதி, "தமிழ்நாடு நகர் & ஊரமைப்பு சட்ட விதிகளின் படி தனியார் பள்ளிகள் திட்ட அனுமதி குறித்து விண்ணப்பித்து இருந்த நிலையில், அவை முறையான அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. ஆதலால், கடந்த 2011 ம் ஆண்டுக்கு பின் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு திட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.