மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிவாரண பொருட்களை வாங்கச்சென்ற 14 வயது சிறுமி யுவஸ்ரீ, கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாப பலி: சென்னை வெள்ளத்தால் நடந்த சோகம்.!
கருணாஸின் அம்பாசமுத்திரம் அம்பானி திரைப்படத்தில், கதாநாயகனின் சிறுவயதில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புடவை, சேலை உட்பட நிவாரண பொருட்கள் வழங்கும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அவனின் தாய் பலியாகுவது போன்ற காட்சிகள் இருக்கும். அதனைப்போல தற்போது ஒரு சோகம் நடந்துள்ளது பலரையும் கலங்கவைத்துள்ளது.
தலைநகர் சென்னையை புரட்டியெடுத்த மிக்ஜாங் புயலின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசு, தன்னார்வலர்கள், அரசியல் இயக்கங்கள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவற்றை பெறுவதற்கு மக்கள் அந்தந்த வீதிகளில் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் சார்பில் ஒன்றிணைக்கப்பட்டு, அரசியல் இயக்கத்தினரின் வருகைக்கு பின்னர் உதவிகளை பெறுகின்றனர்.
இந்நிலையில், ஆர்.கே நகர் பகுதியில் உள்ள கருணாநிதி நகரில் வசித்து வருபவர் வேலு. சென்னை மாநகராட்சியில் துப்பரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். வேலுவின் மனைவி சொக்கம்மாள்.
தம்பதிகளுக்கு 14 வயதுடைய யுவஸ்ரீ என்ற மகள் இருக்கிறார். அங்குள்ள பள்ளியில் சிறுமி ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். சென்னை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களில், வேலுவின் குடும்பமும் ஒன்று.
சனிக்கிழமையன்று கொருக்குப்பேட்டை பகுதியில் அதிமுக சார்பில் வழங்கப்பட்ட மழை நிவாரண உதவிப்பொருட்களை பெற உறவினர்களுடன் சிறுமி யுவஸ்ரீயும் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி சிறுமி மயங்கியுள்ளார்.
அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது, சிறுமி வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.