இயற்கையின் கோர தாண்டவம்.. மின்சார தாக்குதலில் சிக்கி ஏற்பட்ட உயிரிழப்புகள்.! விபரம் இதோ.!!



chennai-flood-8-died

 

வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மிக்ஜாம் புயலாக உருமாறியது. இந்த புயல் ஆந்திராவில் கரையை கடந்த போதிலும், அதன் மழை கொடுக்கும் மேகங்களால் தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. 

இரண்டு நாட்களுக்கு பின் தற்போது தான் சென்னையில் சூரிய ஒளியை பார்க்க முடிகிறது என பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் கடுமையான வெள்ளம் காரணமாக எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.15-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

Chennai Flood

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது. அதன்படி, மின் தாக்குதலுக்கு உள்ளாகி பலரும் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியைச் சார்ந்த பத்மநாபன் (வயது 50) என்பவர் லோன் ஸ்கொயர் சாலையில் ஆவின் பூத் அருகே மின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார். 

துரைப்பாக்கம் பகுதியைச் சார்ந்த கணேசன் (வயது 70) என்பவர் செல்வ விநாயகர் கோவில் பகுதியில் செல்லும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மேலும் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரிகள் சிவசங்கரன், ராஜசேகர் ஆகியோர் இபிகே சம்பத் சாலை பகுதியில் மின்சார தாக்குதல் ஏற்பட்டு பின் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஜார்க்கண்ட் மாநிலத்தை சார்ந்த புலம்பெயர் கட்டிடத் தொழிலாளி மிதுன் என்பவர் கீழ்ப்பாக்கம் காவலர்கள் குடியிருப்பில் சிறுநீர் கழிக்கும் போது மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்தார்.