மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சரக்குக்கு அக்கப்போர்.. போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த கல்லூரி மாணவன்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!
தனக்கு சரக்கு கிடைக்காத வெறியில், 19 வயது மாணவன் நட்சத்திர விடுதியின் இரும்பு கேட்டை உடைத்து, சென்னையில் பிரதான போக்குவரத்து பாதையை ஸ்தம்பிக்க வைத்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள கிண்டி, கத்திப்பாராவில் நட்சத்திர விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த நட்சத்திர விடுதிக்கு வந்தவர், உணவகத்தில் உள்ள மதுபான பாருக்கு சென்றுள்ளார். அவர் ஆள் பார்க்க வயது குறைந்தவர் போல இருந்ததால், அவரை மேற்படி பாருக்குள் மது அருந்த அனுமதி செய்ய இயலாது என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இளைஞர் ஆத்திரத்தில் சத்தமிட்டு நிலையில், அங்கிருந்து வெளியேறி காரை எடுத்து நட்சத்திர விடுதியின் இரும்பு கேட்டை உடைத்து சாலையில் நிறுத்தியுள்ளார். இதனால் மீனம்பாக்கம் நோக்கி பயணித்த வாகனங்கள் நடுவழியில் நின்ற நிலையில், சம்பவம் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பரங்கிமலை காவல் துறையினர், காரில் காயத்துடன் இருந்த வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், இவர் சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் ஆகாஷ் (வயது 19) என்பது தெரியவந்தது.
இதன்பின்னர், இரும்பு கேட்டோடு இருந்த காரை பொக்லைன் உதவியோடு அதிகாரிகள் அகற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனக்கு சரக்கு கிடைக்காத வெறியில், 19 வயது மாணவன் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"குடி குடியைக் கெடுக்கும், உடல் நலத்தை சீரழிக்கும், உயிரை கொல்லும்".